Home இலங்கை சமூகம் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு

அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் இயங்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும்,  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் இயங்கும் அல்லது செயற்பட விரும்பும் அனைத்து வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் (INGO) அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

பணமோசடி எதிர்ப்பு மற்றும் நிதியுதவி

அதேநேரம், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்துள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய செயலகத்திலும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என செயலகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கொள்கைகளுக்கு இணங்க செயலகம், அண்மையில் இலங்கை மத்திய வங்கியுடன் பணமோசடி எதிர்ப்பு மற்றும் நிதியுதவி பயங்கரவாதத்திற்கு எதிரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தநிலையில்,  பதிவு நடைமுறையின் படி, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் செயலகத்தில் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.

அமைச்சுக்களிடமிருந்து அனுமதி

அவை பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களுக்கு அனுமதி பெற அனுப்பப்படும்.

அனுமதி அறிக்கைகள் பெறப்படும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தற்காலிக சான்றிதழ் அமைப்புக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுக்களிடமிருந்து அனுமதி அறிக்கைகளைப் பெற்ற பிறகு, இயக்குநர் நாயகம், அறிக்கைகளை சரிபார்த்து, சிக்கல் இல்லை என்றால் பதிவுச் சான்றிதழை வழங்குவார் அல்லது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version