லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லாக்களை இலக்கு வைத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்களின்(sri lanka) பாதுகாப்பு தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அவர்கள் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்கள்
பதிவு செய்யும் போது முன்னுரிமை எப்படி வழங்கப்படும் மற்றும் எந்தெந்த பிரிவுகள் அனுப்பப்படும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்
மேலும், வான்வழித் தாக்குதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்த முந்தைய அறிவிப்புகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்கவும், உடனடியாக அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையர் எவருக்கும் எதிர்பாராதவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.