Home இலங்கை சமூகம் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

0

மடூல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபர்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிட்டமாறுவ – கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர் வீட்டின் முன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று
விளக்கு ஏற்றும்போது குளவி கலைந்து அவரைத் தாக்கியுள்ளது.

பிரேத பரிசோதனை

இதன்போது, வீட்டில் உள்ளே சென்று தன்னைக் குளவி தாக்கியது என்று கூறிவிட்டு
படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/old-person-died-after-being-bitten-by-a-wasp-1729717658

NO COMMENTS

Exit mobile version