Home இலங்கை சமூகம் முக கவசம் அணியுமாறு பறந்தது அறிவித்தல்

முக கவசம் அணியுமாறு பறந்தது அறிவித்தல்

0

அலுவலகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ள நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

இது தொடர்பாக, மேல் மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பி.என். தம்மிந்த குமார கையொப்பமிட்ட கடிதம் மேற்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வைரஸ் பரவுதல் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version