Home இலங்கை சமூகம் திருகோணமலையில் நோயாளர் காவு வண்டிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

திருகோணமலையில் நோயாளர் காவு வண்டிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டிகளில்(Ambulance) குளிரூட்டி (Air conditioner) பயன்படுத்தாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக
அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அதிக வெப்பநிலை காரணமாக நோயாளர் காவு வண்டி சாரதிகள் தனக்கு மாத்திரம் குளிரூட்டியை பயன்படுத்தி கொண்டு பின்புறமாக இருக்கின்ற நோயாளர்களுக்கு குளிரூட்டி போடுவதில்லை என
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குறித்த விடயம் தொடர்பாக திருவண்ணாமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும்,
நோயாளர் காவு வண்டி சாரதிகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கும் இது  தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரியக் கிடைத்துள்ளது.

எனினும் தமது வருமானத்தைக் கூட்டிக் கொள்ளும் நோக்கில் சில சாரதிகள் குளிரூட்டி போடாமல் அதிக வெப்பத்தில் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வருவதையும்
அவதானித்துள்ளனர்.

ஆகவே இனி வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் நோயாளர்களுக்கு வருவதை
தடுக்கும் நோக்கில் அனைத்து நோயாளர் காவு வண்டி சாரதிகளுக்கும் நோயாளர்களை ஏற்றி
வரும் போது குளிரூட்டியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார
சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களில் சாரதிகள் குளிரூட்டியை பயன்படுத்தாமல் நோயாளர்களை ஏற்றி வந்தால்
உடனடியாக அறிவிக்குமாறும் கூறியுள்ளார்.

இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண் நளினி

ஈரானை இஸ்ரேல் தாக்கியது இன்று வரை மர்மமாகவே தொடரக் காரணம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version