Home இலங்கை அரசியல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்மூரம் : சிறீதரன் பகிரங்கம்

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்மூரம் : சிறீதரன் பகிரங்கம்

0

Courtesy: Subramaniyam Thevanthan

தமிழ் மக்கள் தம்மை அங்கீகரித்ததாக சர்வதேசத்துக்கு காட்டவே
உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்மூரமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (
S. Shritharan) தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் ஊடாக..

மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் ஊடாக, தமிழ் மக்கள்
தங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது
இனப்படுகொலை அல்ல என்றும் காட்டவே முயற்சிக்கின்றது.

இந்நிலையில், மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில்
இலங்கையின் அரசு, இராணுவ நிர்வாகம் ஈடுபடவில்லை என்று நிரூபிப்பதற்கான
ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலைப் பயன்படுத்த எல்லாவகைப்
பிரயத்தனங்களையும், மோசடிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version