Home இலங்கை அரசியல் ரணிலை விட ஆபத்தான அநுர! தமிழர்பகுதிகளில் மந்திரசொல்லாக மாறியுள்ள AKD..

ரணிலை விட ஆபத்தான அநுர! தமிழர்பகுதிகளில் மந்திரசொல்லாக மாறியுள்ள AKD..

0

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கைகளில் இருந்த மக்கள் செல்வாக்கு மற்றும் தலைமைத்துவம் மெதுமெதுவாக தேசிய மக்கள் சக்தியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றதா என்ற அளவிற்கு அங்கொரு அரசியல் மாற்றம் மௌனமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமிழ்தேசியத்தை விட்டு விலகிச்செல்கின்றார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு கடந்த வருடத்தை விட தற்போது அதிகரித்துள்ளது.

தற்போதைய இளம் தலைமுறையினர் AKD என்ற வார்த்தையை மந்திர சொல்லாக உச்சரிக்கின்றனர்.

சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பிறகு ஒரு சிங்கள தலைவரை தமிழ் மக்கள் கொண்டாடி தீர்ப்பதை தற்போதுதான் பார்க்க முடிகின்றது.

ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க தனது ஒட்டுமொத்த அரசியல் திட்டத்தின் மூலம் தமிழ் அரசியல்வாதிகளின் அரசியலை பலவீனப்படுத்தியுள்ளார்.

மக்களாலும் ஊடகங்களாலும் விமர்ச்சிக்கப்பட்ட அரசியல்வாதியொருவருக்கு பல அரச அதிகாரிகள் பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தவிடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version