Home இலங்கை அரசியல் அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது

அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது

0

 அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன ஆளும் கட்சியின் தேவைகளை நிறைவேற்றுபவராக இருக்கக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு எதிராக ஆளும் கட்சியினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்றை சபாநாயகர் நியமித்தார் என தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்க்கட்சிகளினால் அமைச்சர் பில் ரட்நாயக்க தொடர்பில் செய்த முறைப்பாட்டை சபாநாயகர் நிராகரித்து விட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் நடுநிலையாக இருக்க வேண்டுமே தவிர ஆளும் கட்சிக்கு பக்கச்சார்பாக இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அரச சேவையை வீழ்ச்சியடைச் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளில் அரசியல் ரீதியான தலையீடு இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் கருவியாக விசாரணைகளை பயன்படுத்தக் கூடாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version