தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் படையினரையும், பொலிஸாரையும் பழிவாங்குகின்றது என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாவுல புபுலிய என்னும் இடத்தில் இன்று(31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் தந்தையை தேசிய பட்டியல் வேட்பாளராக அறிவித்த ஜே.வி.பி கட்சி பயங்கரவாதிகளுக்கு பாலூட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சி
இவ்வாறான செயற்பாடுகள் ஜே.வி.பி கட்சியின் வரலாற்றில் ஒர் அங்கமாகவே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சியின் இயலாமையை மூடி மறைக்கும் நோக்கில் அரசாங்கம் படைவீரர்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கைது
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் காரணமாகவே இன்று ஜனாதிபதி அநுரகுமார ஜனாதிபதி மாளிகைகள் தமக்கு தேவையில்லை என கூற முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றக்கும்பல்களை வெளிநாட்டில் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதனை வீர செயலாக காண்பித்துக் கொள்ளும் அரசாங்கத்திற்கு படைவீரர்களை படைவீரர்கள் என அழைப்பதற்கு முதுகெலும்பு இல்லை என நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
