Home இலங்கை அரசியல் மின்சாரக் கட்டணம் குறித்து தேசிய மக்கள் சக்தி கூறியது பொய்

மின்சாரக் கட்டணம் குறித்து தேசிய மக்கள் சக்தி கூறியது பொய்

0

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பொய்யுரைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையின் ஊழல் மோசடிகள் மற்றும வீண் விரயத்தை குறைப்பதன் மூலம் 30 வீதமளவில் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி மக்களிடம் உறுதிமொழி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த உறுதிமொழி பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செலவை விடவும் கட்டணத் தொகை குறைவாக காணப்படுவதனால் நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

மின்சார உற்பத்திக்கான செலவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதனை போட்டித்தன்மை அதிகரிப்பு ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version