தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சிறப்புரிமை
கடந்த காலங்களில் தாம் நாடாளுமன்ற உணவகத்தில் பகல் உணவு மட்டும் சில நாட்களில் உட்கொண்டதாகவும் காலை உணவு உட்கொண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலை மற்றும் மதிய உணவை உட்கொள்வது மட்டுமன்றி முடிந்தால் இரவிற்கும் உணவை கட்டி எடுத்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் 39 உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்த போதும் இந்த நிலையை அவதானிக்க முடிந்தது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.