Home இலங்கை அரசியல் தொழில் கல்வி பிரதி அமைச்சரின் கருத்துக்களுக்கு கடும் விமர்சனம்

தொழில் கல்வி பிரதி அமைச்சரின் கருத்துக்களுக்கு கடும் விமர்சனம்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றபோது இலங்கையின் திறைசேரி, 20
மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே வைத்திருந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக காலியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ஹேவகே,
தற்போதைய நிர்வாகம் திறைசேரி இருப்புக்களை 6.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாக
உயர்த்தியுள்ளதாகக் கூறியிருந்தார்
இந்த கைதட்டல் போதுமானதாகத் தெரியவில்லை.

20 மில்லியன் டொலர்கள் மட்டுமே
இருந்த ஒரு கணக்கில் 6,190 மில்லியன் டொலர்களை தமது அரசாங்கம்
திரட்டியிருக்கும்போது, இன்னும் கைதட்டல் இருக்க வேண்டும் என்று அவர்
கூட்டத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

திறைசேரி இருப்பு

ஏனினும், பிரதியமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கம் பதவி விலகும் போது திறைசேரி இருப்பு 6 பில்லியன் அமெரிக்க
டொலர்களை நெருங்கி இருந்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபோது எரிவாயு அல்லது எரிபொருள் விநியோகம்
இல்லை என்ற ஹேவகேவின் தனி கூற்றையும் சமூக ஊடக பயனர்களும் சவால் செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version