Home இலங்கை அரசியல் மகிந்தவை நலன் விசாரித்த அநுர தரப்பு..

மகிந்தவை நலன் விசாரித்த அநுர தரப்பு..

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபமொன்று திறக்கப்பட்ட நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஐயா, சுகமா..

மகிந்த ராஜபக்ச நிகழ்வுக்கு வருகை தந்தபோது, அங்கு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜகத் விதான மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் அவரை வரவேற்றுள்ளனர்.

சந்திம ஹெட்டியாராச்சி, மகிந்த ராஜபக்சவிடம், “எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, சுகமா?” என்று வினவியுள்ளார். அதற்கு மகிந்த ராஜபக்ச, “குறை எதுவும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், “ஐயா, நீங்கள் தங்காலை இருந்தா இந்த நிகழ்வுக்கு வந்தீர்களா?” என்று சந்திம மீண்டும் கேட்க, “ஆம், நான் தங்காலையில் இருந்தேதான் இந்த விழாவுக்கு வந்தேன்” என்று மகிந்த பதிலளித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, இருவருக்கும் இடையில் சிறிது நேரம் சுமூகமான உரையாடலும் இடம்பெற்றதாகத் கூறப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version