Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், நிஹால் கலப்பத்தியுடன் (Nihal Galappaththi) ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொடுப்பனவுகளை வைப்பிலிடல்

அத்துடன் பொரளையில் (Borella) உள்ள மக்கள் வங்கியில் (People’s Bank) உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் அந்தப் பணம் பொதுச் சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்றும் இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version