Home இலங்கை அரசியல் இலங்கையின் சுதந்திர தினத்தில் முதல் தடவையாக கலந்து கொண்ட அநுரவின் கட்சி

இலங்கையின் சுதந்திர தினத்தில் முதல் தடவையாக கலந்து கொண்ட அநுரவின் கட்சி

0

அரசாங்க கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை
முதன்முறையாக, இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இதனை
சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில், தமது கட்சி எப்போதும்
பங்கேற்றுள்ளது. 

அவ்வாறு பங்கேற்பது கடமையும் ஆகும் என்று கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக பங்கேற்பு

ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒருபோதும் சுதந்திர தின
கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, 77ஆவது சுதந்திர தின நிகழ்விலேயே அவர்கள் முதன்முறையாக பங்கேற்றுள்ளனர்
என்று கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version