தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இன்றையதினம்(02.03.2025) குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்,
கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டிருந்தனர்.
மக்களின் நலன்
மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த
அலுவலகம் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
