Home இலங்கை அரசியல் யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

0

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக
தேசிய மக்கள் சக்தி வேட்புமனுவை  தாக்கல் செய்துள்ளது.

குறித்த வேட்பு மனுத்தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (10) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின்
நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம்
சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் வேட்புமனுவை கையளித்தனர்.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதி 

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக
க.இளங்குமரன் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, யாழ். தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடவுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை(11) நண்பகலுடன் நிறைவடைகின்றமை
குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://ibctamil.com/article/npp-submits-jaffna-election-nomination-1728553923

NO COMMENTS

Exit mobile version