Home இலங்கை அரசியல் அரச அதிகாரத்தை மீறும் தேசிய மக்கள் சக்தி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரச அதிகாரத்தை மீறும் தேசிய மக்கள் சக்தி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும்
மதிப்பளிக்காது அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி
செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.

நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரசார மேடையில் தன் தொடர்பில் பெயர்
குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் முற்றத்தில் கோவிலின்
முகப்பினை மறைத்து மேடை அமைத்து தேசிய மக்கள் சக்தி பிரச்சாரக் கூட்டத்தினை
நடத்தியது.

விதிமுறை மீறல்

அப்பிரச்சாரம் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என்பதை நேரில்
தேர்தல் முறைப்பாட்டு அலுவலர்கள் முன் சுட்டிக்காட்டினேன்.

அதுபற்றிய
முறைப்பாடுகளையும் மேற்கொண்டேன். சட்ட, சம்பிரதாய மற்றும் எமது சமய ஒழுக்க்
விதிகளின் அடிப்படையில் ஆலய வளாகத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை எந்த
கட்சியும் மேற்கொள்ள முடியாது.

வீதியால் செல்பவர்கள் கூட கோவிலை தரித்து
செல்லவேண்டும். ஆகவே கோவிலை மறைத்து அரசியல் பிரச்சாரம் செய்வது என்பது என்மை
அதிர்ப்திக்குள்ளாக்குகின்றது.

இவைகளே நாம் எதிர்ப்பினை மேற்கொள்ளக் காரணம்.

தேர்தல் முறைப்பாடுகளையடுத்து தேர்தல் அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்க்கு
வழங்கிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் என்ற அதிகார மமதையிலேயே பிரதமர்
தலைமையிலானவர்கள் மீறினர்.

NO COMMENTS

Exit mobile version