Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டோம் : அடித்துக்கூறும் அநுர தரப்பு

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டோம் : அடித்துக்கூறும் அநுர தரப்பு

0

தேசிய மக்கள் சக்தியானது (NPP) வடக்கு, கிழக்கில் உள்ள  உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கோ (ITAK) அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை மறுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது.

 தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்தல்

மக்கள் வழங்கிய ஆணையை மீறிச் செயற்படும் எண்ணம் எமது தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இல்லை.

வடக்கு, கிழக்கில் எந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

மற்றைய சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க முடியும். இதில் தேசிய மக்கள் சக்தி தலையிடாது.

இதைக் குழப்பும் வகையில் மக்களின் ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் எந்தக் கட்சியும் செயற்படக்கூடாது“ என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/iSVSW6JJDyI

NO COMMENTS

Exit mobile version