முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைபற்றி இருந்தது.
நடந்து முடிந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், சின்னராசா லோகேஸ்வரன் கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் பதவி விலகி இருந்தார்.
இதையடுத்து புதிய தவிசாளரை தேர்தெடுப்பது தொடர்பில், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் தவிசாளர் தெரிவு கூட்டம் இடம்பெற்றது.
இதனடிப்படையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தவிசாளராக தெரிவானார்.
இந்தநிலையில், வரலாற்றில் முதன் முறையாக ஒரு ஆளும் கட்சி தமிழர் பிரதேசத்தில் பிரதேச சபையை கைப்பற்றியுள்ளமை பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காரணம், இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறு ஆட்சி பீடம் ஏற வழிவகுத்துள்ளனர்.
இதே போலத்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் இரட்டை நிலைப்பாட்டுடன் முன்னிலையாகி இருந்தனர்.
இந்தநிலையில், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையின் எதிரொலி ஆளும் கட்சிகளுக்கு சார்பாக நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருப்பது மக்களுக்கிடையில் தமிழ் தலைமைகள் மீதான நம்பிக்கையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பிலும் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/3w-aw2CXyWQ?start=134
