Home இலங்கை அரசியல் நாமல் தரப்பின் நுகேகொட பேரணியில் ரணிலுக்கு நன்றிக் கடன்

நாமல் தரப்பின் நுகேகொட பேரணியில் ரணிலுக்கு நன்றிக் கடன்

0

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்பு பேரணி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ள பொதுமகன் ஒருவர் ”ரணிலுக்கு நன்றி”(Thank You Ranil) என்ற வாசகத்துடனான பதாதையுடன் கலந்து கொண்டுள்ளார்.

ரணிலுக்கு நன்றி..

இந்த நிலையில், அங்கு கலந்து கொண்டுள்ள ரணில் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, ”பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நாட்டின் கட்டியெழுப்பியது ரணில்தான்.

நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் இல்லாமல் ஆக்கியது ரணில்தான். எனவே அவருக்கு நன்றி செலுத்துவது எமது கடமை. அவரே எமது தலைவர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போதுவரையில் பேரணியில் கலந்து கொள்வதற்காக பெருமளவான மக்கள் வருகைத் தந்துள்ளனர்.

மேலும், பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் களத்தில் ஒன்று திரண்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   

NO COMMENTS

Exit mobile version