Home இலங்கை அரசியல் நுகேகொடைக் கூட்டம் அரசுக்குச் சவால் அல்ல : கூட்டு எதிரணியினருக்குப் பிரதி அமைச்சர் பதிலடி

நுகேகொடைக் கூட்டம் அரசுக்குச் சவால் அல்ல : கூட்டு எதிரணியினருக்குப் பிரதி அமைச்சர் பதிலடி

0

நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசுக்கு
எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே
தெரிவித்தார்.

நுகேகொடையில் நடந்த கூட்டத்தால் அரசு கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு
எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர்
இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

செல்லாக்காசு போராட்டம்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,  நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள்
உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு
வந்துள்ளனர்.

இந்தக் கூட்டம் அரசுக்குச் சவால் அல்ல. அது செல்லாக்காசு போராட்டம்  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version