Home முக்கியச் செய்திகள் நுகேகொட பேரணி இன்று.! உயர்தர பரீட்சைக்கு பாதிப்பு – காவல்துறையின் எச்சரிக்கை

நுகேகொட பேரணி இன்று.! உயர்தர பரீட்சைக்கு பாதிப்பு – காவல்துறையின் எச்சரிக்கை

0

எதிர்க்கட்சிகளால் இன்று(21.11) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியால் நுகேகொட நகரில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் உள்ள உயர்தர பரீட்சை மையங்களுக்கு
இடையூறுகள் ஏற்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்குத் அறிவித்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இதேவேளை, பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்னர்.

அரசறிவியல் பரீட்சை

இந்த நிலையில், அனுலா மகளிர் வித்தியாலயம், செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி, செயிண்ட் ஜோசப் மகளிர் வித்தியாலயம், சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் நுகேகொட நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி தினமான இன்று(21) 2025 உயர்தர அரசறிவியல் பரீட்சை நடைபெறவுள்ளது.

மேலும், நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் குறித்த பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version