Home இலங்கை சமூகம் சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

0

நாட்டில் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் டெங்கு நோயைத் தடுக்க சுற்றுப்புறங்களில் தூய்மையை பேணுமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள்

அதன்படி, இம்மாதம் 20 ஆம் திகதி வரை 35,375 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகளவாக 8,599 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர்.

 

மேல் மாகாணத்தில் இதுவரை 14,448 பேர் பதிவாகியுள்ளதுடன், மாகாண ரீதியாக அதிகளவாக இம்மாதத்தில் 2,630 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version