Home முக்கியச் செய்திகள் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

0

இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு(sri lanka) வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,250,000ஐ தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

முதலிடம் பிடித்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 

அவர்களில் பெரும்பாலானோர் இந்திய(india) சுற்றுலாப் பயணிகள் அவர்களின் எண்ணிக்கை 237,649.ஆகும்.

மேலும், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

11 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

இதேவேளை, இம்மாதம் முதல் 11 நாட்களில் 73,373 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.  

Source: https://ibctamil.com/article/number-of-foreign-tourists-visited-this-country-1723705162?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version