Home இலங்கை சமூகம் நுவரெலியா – டயகமவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு

நுவரெலியா – டயகமவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு

0

Courtesy: Aadhithya

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டம் டயகம நகரத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் ஓரிரு குரங்குகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் தற்போது குரங்குகள் அதிகரித்துள்ளமையால் வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதாகவும் நகரத்துக்கு வரும் பொதுமக்களின் பொருட்களைகளை பறித்து செல்வதாகவும் நகரத்திற்கு வருபவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலை மாணவர்கள்

இது தொடர்பில் நகர வர்த்தகர்கள் தெரிவிக்கையில், “வர்த்தக நிலையங்களை எந்நேரமும் ஒருவர் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் கடையினுள்ளே புகுந்து பொருட்களை எடுத்து சென்று விடுகின்றது.

குறிப்பாக மரக்கறி கடைகளில் மரக்கறிகளை தூக்கி சென்று விடுகின்றது.

மேலும் கூரை தகரங்களை உடைப்பதும், முச்சக்கர வண்டிகளில் ஆசனங்களை சேதப்படுத்துவதும் பாடசாலை மாணவர்களை துரத்துவதுமென நாளுக்கு நாள் இதன் சேட்டைகள் அதிகரிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பேருந்து தரிப்பிடங்களில் பொருட்களை வைத்து நிற்கும் போது கூட்டம் கூட்டமாக பொருட்களை அபகரிக்க வருகின்றது.துரத்தவும் பயமாக இருக்கின்றது.

மேலும் பெரிய பெரிய குரங்குகள் சீறிபாய்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள்

இந்த குரங்குகளால் டயகம நகருக்கு வருபவர்கள் பெரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு தெரிவித்தாலும் இதுவரை குரங்குகளின் அட்டகாசத்திற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.

எனவே இனிவரும் காலங்களில் குரங்குகளின் அட்டகாசத்திற்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version