Home விளையாட்டு ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து பந்துவீச்சாளர் படைத்த அரிய சாதனை

0

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில், நியூசிலாந்து அணி(New Zealand) பந்து வீச்சாளர் லோகிபெர்குசன்(Lockie Ferguson )  அரிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம்(17), நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா(Papua New Guinea) அணிகள் விளையாடின.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

வரலாற்று சாதனை

இதற்கமைய களமிறங்கிய, பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும், அந்தவகையில்
பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா அணி வீரர்கள் ஒரு ஓட்டம் கூட பெறவில்லை.

வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியுள்ளதோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆறுதல் வெற்றி

20 ஒவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பவுலர் 4 ஓவரையும் மெய்டனாக்குவது இதுவே முதல் முறையாகும் என்பதோடு ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது 2-வது நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை மெய்டனாக வீசுவதே அவ்வளவு எளிதானதல்ல. இந்த சூழலில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி, அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வாகவே பார்க்க முடிகிறது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு விலகியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version