Home முக்கியச் செய்திகள் இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ள இடம் : எங்கு தெரியுமா !

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ள இடம் : எங்கு தெரியுமா !

0

நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்தநிலையில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளதனால் அதிகமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

இவ்வாறு விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நகர முடியாத சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை (Badulla), நுவரெலியா – கண்டி (Kandy) மற்றும் நுவரெலியா – ஹட்டன் (Hatton) போன்ற பிரதான வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக சுற்றுலா பயணிகள் கிரகரிவாவியிலும் அதன் கரையோரத்திலும் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை அனுபவித்து மகிழ்வதுடன் இதில் படகு சவாரி வார இறுதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version