Home இலங்கை சமூகம் மண்சரிவு காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

மண்சரிவு காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

0

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான
வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய
அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவாக இந்த முக்கியப் பிரதான
வீதியில் வாகனப் போக்குவரத்து 28ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மழை குறையும் வரை

பிரதேசத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக மண்மேடுகள், கற்கள்,
மரக்கிளைகள் உள்ளிட்டவை பிரதான வீதிக்கு சரிந்து விழுந்துள்ளன.

இதனால் வீதி
முழுவதும் மண் மற்றும் கற்கள் குவிந்துள்ள நிலையில், போக்குவரத்தை சீராக
செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மண் சரிவுகளை அகற்றும் பணிகள் அவசரகாலத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தாலும்,
மழை மேலும் அதிகரித்து வருவதால் இந்தப் பணிகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற
முடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்து நிலைமையை கண்காணித்து
வருகின்றனர்.

மழை குறையும் வரை பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளை
பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version