Home முக்கியச் செய்திகள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை

0

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வரலாற்றில் முதல் தடவையாக இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சாதனை படைத்த மாணவர்கள் 

இந்தப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான
பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28
மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட
சித்தியையும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன்
இம்முறை அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version