Home இலங்கை அரசியல் இறுதி யுத்தத்தில் மகிந்தவுக்கு எதிராக ஒபாமா வழங்கிய இராஜதந்திர அழுத்தம்

இறுதி யுத்தத்தில் மகிந்தவுக்கு எதிராக ஒபாமா வழங்கிய இராஜதந்திர அழுத்தம்

0

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா இராஜதந்திர ரீதியில் பாரிய அழுத்தத்தை வழங்கியதாக மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“இறுதி போரின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகம் கொடுத்த சர்வதேச இராஜதந்திர அழுத்தங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பார்கள்.

இராஜதந்திர அணுகுமறை 

“ தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களில் தொழில் முறையிலான இராஜதந்திர அணுகுமறை காணப்படவில்லை.

கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணத்தின் பின்னர் நாம் மாலைதீவு பயணத்தில் எதிர்பார்த்தது கூட நடக்கவில்லை.

இதன்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட இராஜதந்திர கோட்பாட்டில் வெளிநாடுகளில் அநுர  செயற்படுகின்றார்.

இறுதி யுத்தம்

வெளிநாடுகளில் இலங்கை தொடர்பில் வெறுப்புடனான போக்கு இல்லை என்பதால் லாவகமாக சென்று வருகிறார்.

மேலும், இறுதி யுத்தத்தின் போது அன்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா ஜேர்மனின் ஏஞ்லா மேர்கல் பிராத்தானியாவின் கோட்டன் பிரவும் ஆகியோர் ஒன்றாக கொடுத்த இராஜதந்திர அழுத்தங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி செயற்பட்ட  விதம் இப்பொது் பெருமையாக பேச வேண்டிய விடயமாகும்.

NO COMMENTS

Exit mobile version