Home ஏனையவை வாழ்க்கைமுறை சிறுநீரக நோய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..

சிறுநீரக நோய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..

0

நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகளில் சுமார் பத்து சதவீதமானோர் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாமல் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் ஏற்படுவதற்கான காரணம்

தேசிய சிறுநீரக நோய்கள், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் வைத்திய நிபுணர் அர்ஜுன மாரசிங்க தெரிவித்துள்ளதாவது,
உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை கட்டுப்பாடாக வைத்திருக்க தவறும் நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்த முடியும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் வரை பல நோயாளிகள் கண்டறியப்படுவதில்லை.

அதிக கொழுப்பு அல்லது உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடுமையான சிக்கல்களைத் தடுக்க நோயை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Source: https://tamilwin.com/article/of-kidney-patients-sri-lanka-1771231804

NO COMMENTS

Exit mobile version