இலங்கையின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய 16 பொறுப்பதிகாரிகள்
உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உடனடி இடமாற்றங்கள் மற்றும் அதற்கு பதில் புதிய நியமனங்களுக்கு தேசிய
பொலிஸ் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இடமாற்றம்
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில், 12 மூத்த பொலிஸ்
ஆய்வாளர்கள் மற்றும் நான்கு பொலிஸ் ஆய்வாளர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
