Home முக்கியச் செய்திகள் வடக்கு – கிழக்கு காணி சுவீகரிப்பு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

வடக்கு – கிழக்கு காணி சுவீகரிப்பு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

0

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இன்று (23) நாடாளுமன்றத்தின் குழு அறை எண் 1 இல் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணிகளை உரிமையுள்ள மக்களுக்கு உடனடியாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முறையான நடைமுறை

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் காணி உரிமைகளைத் தீர்ப்பதற்கு முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடைமுறைகள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், உரிமைகளைக் கொண்ட மக்களிடம் தங்கள் உரிமைகளை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை என வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு முறையான நடைமுறை தேவை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version