Home முக்கியச் செய்திகள் தலைவர் மீளவும் வர வேண்டும் : சாவகச்சேரியில் எதிரொலிக்கும் குரல்கள்

தலைவர் மீளவும் வர வேண்டும் : சாவகச்சேரியில் எதிரொலிக்கும் குரல்கள்

0

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்க வேண்டுமானால் வி.பு களின் தலைவர் மீண்டும் வர வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த போர் முடிவுக்கு கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவு கூறும் தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

குறித்த இந்த நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  (Anura Kumara Dissanayake) தலைமையில் கடந்த 19ஆம் திகதி பத்தரமுல்ல (Battaramulla) இராணுவ நினைவுச் சின்னத்திற்கு முன்பாக நடைபெற்றது. 

இதன்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயக பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி யுத்த வெற்றி நிகழ்வு கொண்டாடப்பட்டமை நியாயமான ஒரு விடயமா என்கின்ற கேள்வியுடன் வருகிறது ஐபிசி தமிழின் “மக்கள் கருத்து” நிகழ்ச்சி.

https://www.youtube.com/embed/CVOknrkmbJ8

NO COMMENTS

Exit mobile version