Home முக்கியச் செய்திகள் திருமலையில் மக்கள் காணிக்குள் புகுந்த அதிகாரிகளால் பரபரப்பு

திருமலையில் மக்கள் காணிக்குள் புகுந்த அதிகாரிகளால் பரபரப்பு

0

திருகோணமலை(Trincomalee) – முத்து நகர் கிராமத்தில் இலங்கை துறை முக அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட நில
அளவை நடவடிக்கைக்கு மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் இன்று(03) கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் விவசாய பயிர்ச் செய்கை குடியிருப்பு காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் துறை முக அதிகார சபையின்
உத்தியோகத்தர்கள் காவல்துறையினருடன் வருகை தந்திருந்துள்ளனர்.

மக்கள் காணி

குறிப்பிட்ட காணிகளை தனியார் முதலீட்டுக்காக சூரிய மின் சக்தி உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு நீண்ட
கால குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன விஜயம் செய்து குறித்த துறை முக அதிகார
சபை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நிறுத்தப்பட்ட நில அளவீடு

அத்துடன், இது தொடர்பில் உரிய அமைச்சுக்களின் பேச்சுவார்த்தையின் பிரகாரம் முடிவெடுப்பது தொடர்பில் பரிசீலனை
செய்யப்பட வேண்டும் எனக் கோரியதன் அடிப்படையில் அங்கிருந்து தற்காலிகமாக உரிய
அதிகாரிகள் கலைந்து சென்றதுடன் காணிக்கான நில அளவீடும் பொது மக்களின்
உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக விவசாயத்தை நம்பியே
வாழ்வாதாரமாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

எனினும், துறை முக அதிகார சபையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version