Home இலங்கை அரசியல் தலைமறைவான ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகும் அதிகாரிகள்

தலைமறைவான ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகும் அதிகாரிகள்

0

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை முடக்குவதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

29 ஆம் திகதி திட்டமிட்டபடி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

அதன்படி, ராஜித சேனாரத்னவின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

காணிப் பதிவேடு

இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட காணிப் பதிவேடு அலுவலகங்கள் மற்றும் அவர் வசிக்கும் வீடுகளின் பிரதேச செயலக அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்ன ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்தியது.

அதன்படி, 20 ஆம் தேதி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முனிலையாகுமாறு”அறிவிப்பு உத்தரவை” பிறப்பித்தது.

இதன்படி கொழும்பு தலைமை நீதவானின் கையொப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் சிங்களம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்ட இந்த வெளியீட்டு உத்தரவு, குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்ன வசிக்கும் ஐந்து வீடுகளில் 21 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய உத்தரவு அந்த வீடுகளைச் சுற்றி ஒலிபெருக்கிகள் மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version