ஈரானில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளியான தகவலையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3 வீதமாக உயர்ந்து 90 டொலராக இருந்தது, அதேநேரத்தில், தங்கத்தின் பெறுமதி ஒரு பவுணுக்கு 2,400 டொலராக இருந்தது.
இந்தப் புதிய விலைகள் அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.
சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!
உலக பொருளாதாரம்
அதுமாத்திரமன்றி, ஜப்பான், ஹொங்கொங், தென் கொரியா ஆகிய நாடுகளில் பங்குச்சந்தை சரிந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து தற்போது வேலைநிறுத்தத்தின் செயற்திறன் மற்றும் சேதத்தை மதிப்பீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றமானது, உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |