Home இலங்கை சமூகம் எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம் : வெளியான தகவல்

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம் : வெளியான தகவல்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெனிசுவேலாவுக்கு விதிக்கப்பட்ட தடை

வெனிசுவேலாவுக்கு நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களை தடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விலை 1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

Brent (பிரெண்ட்) கச்சா எண்ணெய் விலைகள் 87 சதத்தில் அல்லது 1.5 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்59.79 டொலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் 85 சதத்தில் அல்லது 1.5 வீதத்தால் உயர்ந்து ஒரு பீப்பாய் 56.12 டொலராக உள்ளது.

அமெரிக்க எண்ணெய் வர்த்தகர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையால் ஒரு நாளைக்கு 0.4-0.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய்க்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.இதனால் ஒரு பீப்பாய்க்கான விலைகள் ($1-2) டொலரால் உயரலாம்.

தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிரான தடையை அமெரிக்கா எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதனால் வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகக் குறைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version