க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலையில் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
காரணம்
இந்த நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை பின்வரும் நேரடி தொலைபேசி எண்கள் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். – 1911, 0112784208, 0112784537, 0112786616
மேலும், தொலைநகல்: 0112784422
பொது தொலைபேசி எண்கள்: 0112786200, 0112786201, 0112786202
மின்னஞ்சல்: gcealexam@gmail.com என்பவற்றின் ஊடாகவும் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் அறிந்து கொள்ளலாம்.