சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
அண்மையில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 scholarship exam) வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர (Thilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.