ரி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா (Australia) – ஓமன் (Oman) அணிகள் மோதியன.
இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று (06) காலை நடைபெற்றது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 39 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பான ஆட்டம்
இந்த போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓட்டங்கள் பெற்று 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
எனினும், வார்னர் (David Warner) – ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis )இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் புள்ளியை உயர்த்தினர்.
குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சி
அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார்.
இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் அவுஸ்திரேலியா அணியின் உடை மாற்றும் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் உடை மாற்றும் அறைக்கு சென்றார்.
உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது உடை மாற்றும் அறைக்கு சென்றார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source: https://ibctamil.com/article/oman-vs-australia-match-t20-2024-1717673773
