Home இலங்கை குற்றம் யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – வறுத்தோலை
பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (02.11.2024) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/one-arrested-in-jaffna-with-illegal-alchohol-1730592459

NO COMMENTS

Exit mobile version