Home இலங்கை குற்றம் தடை செய்யப்பட்ட கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் படகுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை
கட்டுப்படுத்தும் நோக்குடன் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றி
வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகள்

இதன் ஒரு பகுதியாக நேற்று(10) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கையில்
ஈடுபட்ட படகுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரும் உடமைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம்
நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version