Home இலங்கை சமூகம் யாழில் சோகம் : வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் சோகம் : வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று(10.10.2025) உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம்
சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில்
கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து
உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். 

NO COMMENTS

Exit mobile version