Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0

கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியுடன் சண்டை

சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக ஏழு நாள்
தடுப்புகாவலில் இருந்து விடுதலையாகி நேற்றுமுன்தினம் வீடு வந்து மது
அருந்திவிட்டு சட்டவிரோத துப்பாக்கியை வைத்து மனைவியுடன் இரவு நேரத்தில் சண்டையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு சென்ற பொலிஸார்
சட்டவிரோத இடியன் துப்பாக்கியை வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.

தடுப்பு காவலில் வைக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் நேற்றைய தினம் முல்லைத்தீவு
நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதாவது 02.04.2025
வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கேப்பாபிலவு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version