Home இலங்கை குற்றம் கொச்சிக்கடையில் சடலம் ஒன்று மீட்பு

கொச்சிக்கடையில் சடலம் ஒன்று மீட்பு

0

நீர்கொழும்பு (Negombo) கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொருதொட்ட பிரதேசத்தில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (20) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/colombo-kochchikade-death-body-recovered-1742524865

NO COMMENTS

Exit mobile version