Home இலங்கை குற்றம் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் இளம் பெண்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் இளம் பெண்

0

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் காயமடைந்தனர்.


சிறப்பு அதிரடிப்படை

இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும் சந்தேக நபர் ஒருவர், கடந்த 18ஆம் திகதி ராஜகிரிய சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் துப்பாக்கி சூட்டுக்கு உதவியதாக சந்தேக நபரின் மனைவி நேற்று கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


மனைவி கைது

சந்தேக நபர் கொட்டவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/women-arrested-for-colombo-gun-fire-1742520799

NO COMMENTS

Exit mobile version