Home இலங்கை குற்றம் கொட்டகலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொட்டகலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0

Courtesy: Aadhithya

திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்புள பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கைது இன்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அதனோடு சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/one-arrested-with-heroin-1717960250

NO COMMENTS

Exit mobile version