Home இலங்கை சமூகம் யாழில் விஷமுடைய விலங்கு ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் விஷமுடைய விலங்கு ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் விஷமுடைய விலங்கு ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(28) இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கைதடியைச் சேர்ந்த 45 வயதுடைய இராசையா தர்மசேனன் என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

காணியொன்றைத் துப்புரவு செய்தபோது விஷமுடைய விலங்கு ஒன்று அவரைத் தீண்டியதையடுத்து,
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட
நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/one-dies-after-bitten-poisonous-animal-jaffna-1724965966

NO COMMENTS

Exit mobile version